4 மணிக்கும் இல்ல 7 மணிக்கும் இல்ல… “லியோ” முதல் காட்சி நேரம்…. ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
Author: Shree18 அக்டோபர் 2023, 11:29 காலை
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
பல தடைகளை தாண்டி வருவதால் லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் முதல் 10 நிமிடம் காட்சிகளை பார்க்க தவறி விடாதீர்கள் என்று கூறி மேலும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியுள்ளார்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடையும் வகையில் தமிழ அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதவாது, லியோ திரைப்படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. ரசிகர்களின் கோரிக்கைப்படி அதிகாலை 4 மணிக்கோ அல்லது காலை 7 மணிக்கோ நிச்சயம் வெளியிடப்படமாட்டாது என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் உள்ளனர்.
0
1