கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டூடியோவில் விஜய் மற்றும் அர்ஜுனின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் அர்ஜுன் பாதி எரிந்த முகத்துடன் இருக்கிறார் என்றும் விஜய் உடன் அர்ஜுன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதாகவும் சமீபத்திய தகவல் ஒன்று லீக் ஆகி இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை சமூகவலைத்தளங்களில் லீக்காகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது இப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் விஜய்யின் அப்பாவாம். இவர்கள் இருவரும் கேங்ஸ்டராக இருந்து வருகிறார்கள். அப்பா இடும் கட்டளைகளுக்கு மறுபேச்சு பேசாமல் அநியாங்களில் விஜய் ஈடுபடுவதகவும். அதன் பின்னர் ஒரு சில விஷயங்களில் விஜய் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்ளவதால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு விடுகிறது.
அவர் அப்பாவின் கஸ்டடியில் இருந்து வெளியில் வருகிறார். அதன் பிறகு அப்பா சஞ்சய் த்தின் திட்டங்களை ஒவ்வொன்றாக முறியடிக்கிறார். அதன் பின்னர் ஒரு ஆபத்தில் சிக்கிய அப்பாவை மகனாக சென்று விஜய் அவரின் உயிரை காப்பாற்றுகிறார். அதன் பின்னர் தந்தையை நல்ல மனிதனாக திருத்துகிறாம் விஜய். அதில் அப்பாவுடன் விஜய் மோதப்போகும் அந்த காட்சி தான் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சீன் திரையில் பார்க்க செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்தாலும் இது உறுதிப்படுத்தாத கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.