அரசியலில் நுழையும் விஜய்?.. 2026-தேர்தலுக்காக அதிரடியாக போட்ட திட்டம்..!

Author: Vignesh
11 April 2023, 11:30 am
Vijay - Updatenews360
Quick Share

நடிகர் விஜய் அரசியலில் குதிக்க தயாராகி வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

vijay-updatenew360

கடந்த வாரத்தில்தான் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் கணக்கைத் துவங்கினார். துவங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் அவரை பின்பற்றுபவர்கள் குவிந்தனர். இதனால் இந்தியா முழுக்க விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்தது குறித்த பேச்சு இருந்தது. இந்நிலையில், இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென்று இன்ஸ்டாகிராமில் நுழைந்ததற்கு என்ன காரணம் என பலரும் பலவாறு பேசி வந்தனர்.

Vijay - updatenews360

டிவிட்டரில் மட்டுமே இருந்த விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததற்கான காரணம் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா செய்தியாளரான அந்தணன் இதை விஜய்யின் அரசியல் முன்னெடுப்பு என்று கூறுகிறார். கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் அது விஜய்யும் அஜித்தும்தான். இருவருக்குமே லட்சக் கணக்கிலான ரசிகர் படை இருக்கிறது. இன்ஸ்டாவில் விஜய் வந்தது திடீரென்று நிகழ்ந்ததாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ajith

விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவும், ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து அறியவும், தனது இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

Vijay - Updatenews360

இதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தனது இயக்கத்தை அரசியலை நோக்கி விஜய் நகர்த்துகிறாரா என்ற எதிர்பாப்பு ஏற்பட்டு உள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 482

    0

    0