அதிரும் அரசியல் களம்….நடுங்கும் ஆளுங்கட்சி – உலக பட்டினி தினத்தில் விஜய் செய்யப்போகும் மாபெரும் திட்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

நடிப்பை தாண்டி விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிதும் விரும்பினார். அதற்காக எஸ்.ஏ.சி ரசிகர் மன்றம் துவங்கினார். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.

2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.

விஜய் மக்கள் இயக்கம் கலைந்தது ஏன்?

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென விஜய் தலையிட்டு இதற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.

மீண்டும் விஜய் அரசியல் பிரவேசம்:

பின்னர் தற்போது மீண்டும் விஜய் தரப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வாசம் அடிக்கிறது. ஆம், அண்மையில் கூட அம்பேதகர் பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்தார். அண்மையில் கூட, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து , 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில்விஜய் மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர் அரசியலில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் என்பது உறுதியாக கூறலாம்.

அரசியலுக்கு பணம் சேர்க்கும் விஜய்:

எனவே கண்டிப்பாக விஜய் 2026ஆம் ஆண்டு அரசியல் கட்சி துவங்குவார் என கூறப்படுகிறது. இதற்காக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அரசியல் கட்சியின் முதலீட்டிற்காக கோடி கணக்கில் பணம் சேர்த்து வருகிறாராம். இதற்காக ஒரு படத்திற்கு மட்டும் சுமார் ரூ. ரூ. 125 கோடிக்கும் மேல் விஜய் சம்பளம் வாங்குகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அமல்படுத்தப்போகும் முதல் திட்டம்:

இந்நிலையில் வருகிற மே 28ம் தேதி உலக பட்டினி தினத்தில் விஜய் போட்ட உத்தரவால் ரசிகர்கள் செய்யப்போகும் செயல் ஒட்டுமொத்த அரசியலை கதிகலங்க வைக்கும் என தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஆம், உலக அளவில் நீண்ட கால பட்டினியால் வாழும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

எனவே இந்த தினத்தில் விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை இயக்கம் திட்டத்தை அமல்படுத்தவிருக்கிறாராம். இதனால் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார்களாம். 28. 5 .2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணி அளவில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒரு வேலை மதிய உணவு வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கேட்டு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.

Ramya Shree

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

2 minutes ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

13 minutes ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

2 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

2 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

3 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

3 hours ago

This website uses cookies.