மகன் சஞ்சய்யை கூட விஜய் உடன் பேச விடமாட்றாங்க – ரகசியத்தை உடைத்த பிரபலம்!
Author: Shree14 July 2023, 9:08 am
சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள், கேலி , கிண்டல் என பல சிக்கல் வரும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களுக்கு தான் நல்லவர் என்பதை படத்தின் மூலமாகவும், நேரடியாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்தால் தான் இந்த துறையில் நிலைத்து இருக்கமுடியும்.
அப்படிதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் என்ன பெரிய சிக்கல்கள், பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாமல் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி மக்களை கவர்ந்து வைத்திருந்தவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய் இதற்கு முன்னர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அட்வைஸ்களை கொடுத்து அனுப்பினார். தற்ப்போது விஜய் அரசியலில் முழுவீச்சில் இறங்கிவிட்டார். அண்மையில் கூட தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் பரிசு கொடுத்தார். அப்போது, அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார்.
இதையடுத்து, 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை மற்றும் அவரின் வழிகாட்டுதலின்படி தான் செய்து வருகிறாராம்.
ரகசியமாக விஜய்யின் அரசியல் காய் நகர்த்தி வரும் புஸ்ஸி ஆனந்த் அரசியல் பற்றி விஜய்யிடம் யாரையும் பேசக்கூடாது என்று யாரையும் அனுமதிப்பதில்லையும். அவ்வளவு ஏன் அவரது குடும்பத்தினர் கூட அவரிடம் அரசியல் பற்றி பேசவிடவில்லையாம். மேலும் விஜய்யின் மகன் சஞ்சய் கூட அரசியல் சார்ந்த விஷயம் குறித்து எதுவும் கேட்கமுடிவதில்லையாம். அந்த அளவிற்கு புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் விஜய்யின் இருந்து வருவதாக கோடாங்கி தெரிவித்துள்ளார்.