உறுதி மொழியை படிங்க, புடிச்சா ஜாயின் பண்ணுங்க.. கட்சி App-ஐ Launch செய்த விஜய்..!(வீடியோ)

Author: Vignesh
8 March 2024, 6:51 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதாவது, அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழக வெற்றிக்கழகம் என தொடங்கியிருந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் அரசியலில் குதிக்க உள்ளதாக கூறினார். இதனிடையே, நடிகர் விஜய் தனது கட்சிக்காக ஒரு செயலியை உருவாக்கி உள்ளார். அதோடு அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

மகளிர் தினமான இன்று தனது கட்சியின் புதிய செயலியை அறிமுகப்படுத்திய விஜய் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், இது என்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை நான் எடுத்துவிட்டேன். பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின் தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள், அது உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் நீங்கள் விருப்பப்பட்டால் ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • 30-year-old actress plays wife of 75-year-old actor.. actress shobanaa uthaman explain 75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!