விஜய்க்கு மட்டும் திரும்ப, திரும்ப இது நடக்குது ஏன்..? இப்படியே மொத்தமும் போன எப்படி..? அதிர்ச்சியில் வாரிசு டீம்..!

Author: Vignesh
1 October 2022, 7:00 pm

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்று மீண்டும் லீக்காகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்தப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் ஷாம், சரத்குமார், சங்கீதா ஜெயசுதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைத்ராபாத் மற்றும் விசாகப்பட்டினம் என மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

இரு மாநில சினிமா தொழிலாளர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இரண்டு மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு ஷெட்யூலிலும் ஏதாவது ஒரு காட்சி வெளியான வண்ணம் உள்ளது.

ஏற்கனவே சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் மருத்துவமனை காட்சிகள் என வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது. இண்டோர் இல்லாமல் அவுட்டோரில் குடியிருப்பு பகுதியில் காட்சியாக்கப்பட்ட சண்டைக் காட்சி ஒன்று கசிந்துள்ளது.

இதில் வில்லன்களை புரட்டி புரட்டி அடிக்கிறார் நடிகர் விஜய். இதனை மாடியில் இருந்து ஒருவர் படம்பிடித்துள்ளதாக தெரிகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியே மொத்தப் படமும் வெளியாகிவிடும் போல என கூறி வருகின்றனர்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…
  • Close menu