அந்த விஷயத்தில் விஜய்சேதுபதி ஒரு தொடைநடுங்கி : ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

Author: Vignesh
16 March 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி திறமை மட்டும் இருந்தால் போதும் ஜெயித்து விடலாம் என்பதற்கு தக்க உதாரணமாக இருப்பவர். மக்கள் செல்வன் என ரசிகர்களால் மிகவும் பாசத்தோடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என பல பரிணாமங்களில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

நடிகர் விஜய்சேதுபதி முதன் முதலில் கமலின் ‘ நம்மவர்’ படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு பார்ப்பதற்கு சின்ன பையனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார். ஆனால் அதே கமல் படமான விக்ரமில் அவருக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தான் யாருனு தெரியுமா? என்று சொல்லாமல் நடிகர் விஜய்சேதுபதி சொல்லி காட்டினார்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

நடிகர் விஜய்சேதுபதி அவர் கெரியரிலேயே முதன் முதலாக விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்ற படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் என அனைவரும் அறிந்ததே. இதனிடையே, தென்மேற்கு பரவக்காற்று படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன பெருமைப்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு கலைஞனாக நடிகர் விஜய்சேதுபதி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

vijay sethupathi-updatenews360

தற்போது பாலிவுட் வரைக்கும் நடிகர் விஜய்சேதுபதி தன்னை பெருமைப் படுத்தி வருகிறார். இந்த நிலையில் இவரைப் பற்றிய ஒரு ரகசியத்தை ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது விஜய்சேதுபதிக்கு டிராவல் என்பதே சுத்தமாக பிடிக்காதாம், மேலும் இந்த ஒரு விசயத்திற்கு மிகவும் பயப்படுவார் என தெரிவித்துள்ளார்.

vijay sethupathi-updatenews360

ஷூட்டிங் முடிந்து நடிகர் விஜய்சேதுபதியை வீட்டில் விட்டாலே போதுமாம். 96 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை இயக்குனர் பகிர்ந்திருக்கிறார், அதாவது, அந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக அந்தமானில் 4 நாள்கள் படப்பிடிப்பை நடத்தினார்களாம். அதை வைத்தே அந்தப் பாடலின் மீதி காட்சிகளை எடிட் பண்ணிடலாமேனு விஜய்சேதுபதி இயக்குனரிடம் கூறியுள்ளார்.

vijay sethupathi-updatenews360

ஆனால் பிரேம் குமார் ‘இல்ல சார், இதை முடிச்சுட்டு அடுத்து கல்கத்தா போறோம், அதுக்கு அப்பறம், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர், மணாலி இங்கெல்லாம் படப்பிடிப்பு முடிச்சுட்டு தான் சென்னைக்கே போறோம்’ அப்படினு சொன்னதும் விஜய்சேதுபதி அப்படியே அமைதியாகி விட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்