பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா? அப்போ ரோஷினி இல்லையா..!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2023, 3:00 pm

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

bharathi kannama- updatenews360

இந்த சீரியலில் முதன் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

Roshini-Haripriyan-2-Updatenews360

முதல் சில வாரங்களில் மக்களின் மனதை கவர முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மாவாக முதன் முதலில் நடிக்கவிருந்தது ரோஷினியும் கிடையாதாம். நடிகை அஸ்வினி தானாம்.

நடிகை அஸ்வினி தான் முதன்முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த ஆடிஷனில் இவர் தேர்வாகாமல் போவாகவே, ரோஷினி அந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக நடிகை அஸ்வினி கூறியுள்ளார். நடிகை அஸ்வினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 580

    1

    1