விக்ரமுடன் கை கோர்க்கும் தேசிய விருது இயக்குனர்….தோல்வியை சரிக்கட்ட எடுத்த முடிவா..!

Author: Selvan
20 November 2024, 5:36 pm

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்கலான்.இப்படம் விக்ரமின் தொடர் தோல்விகளை சரிசெய்யும் என்று எதிர்பாத்த நிலையில் படம் ஜொலிக்காமல் தோல்வியே ஆனது.

படத்தில் விக்ரம் நடிப்பில் மிரட்டி இருந்தார்னு சொல்லலாம்.அந்த அளவுக்கு தன்னுடைய உழைப்பை போட்டு இருப்பார். தங்கலான் தோல்வியை அடுத்து அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.ஒரு நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகின்றனர்.

Vikram and Aswin Collaboration for Next Film

இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும், வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர்.படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பாக்கப்படுகிறது.அருண்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

இதையும் படியுங்க: கங்குவா 2 -வை செதுக்க போகும் சூர்யா…..பாயும் சிறுத்தை சிவா..!

இதனையடுத்து விக்ரம் தன்னுடைய 63 வது படத்தை மடோனா படத்தை இயக்கிய அஸ்வினுடன் இணைகிறார். இவர் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். ஒரு இளம் இயக்குனருடன் விக்ரம் இணைவதால் இப்படம் விக்ரமின் தொடர் தோல்விகளை சரிசெய்யலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!