ரசிகரிடம் தனது போன் நம்பரை கொடுத்த விக்ரம்.. அந்த மனசுதான் சார்.. வைரலாகும் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 10:54 am
கடும் உழைப்புக்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் சேது படம் இவருக்கு புகழை கொடுத்தது.
தொடர்ந்து ஹிட் படங்களல் நடித்து முன்னணி ஹீரோவான விக்ரம், எத்தனை வயதை கடந்தாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இன்னும் இளம நடிகருக்கு போட்டியாக விளங்குகிறார்.
இவர் நடிப்பில் வீர தீர சூரன் 2 படம் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் வெளியாக உள்ள படத்திற்காக ப்ரேமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது. இது தொடர்பாக கேரளாவுக்கு சென்ற படக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுவாக விக்ரமுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அப்படி அவர் அங்கு சென்ற போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விக்ரமை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையறிந்த விக்ரம், அந்த ரசிகரை சந்தித்தார். அவர் எழுதிய வாசகங்களை படித்த விக்ரம், ரசிகருக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
The ever kindest @chiyaan ! pic.twitter.com/WMou3L9x0O
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 24, 2025
இதையடுத்து அந்த ரசிகர், உங்க போ நம்பர் வேண்டும் என கூறியதையடுத்து, உடனே தனது மேனேஜரிடம் என்னோட போன் நம்பரை கொடுத்திருங்க, அப்படியே முதல் ஷோக்கான டிக்கெட்டையும் ஏற்பாடு பண்ணி கொடுத்திருங்க என அன்புக் கட்டளையிட்டார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் மட்டுமல்ல அவரது பெற்றோரும், அங்கு கூடியிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்.