வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!

Author: Selvan
5 January 2025, 6:54 pm

மார்கோ-2 படத்தின் அப்டேட்

மலையாள சினிமாவில் உன்னி முகுந்தின் வெறித்தனமான நடிப்பில் வெளியாகி, தியேட்டரில் வசூலை குவித்து வரும் திரைப்படம் மார்கோ.இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Marco part 2 announcement

அதுமட்டுமல்லாமல் கொரியன் மொழியிலும் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.இந்த சூழலில் இப்படத்தின் பார்ட்-2 அப்டேட் தகவல் வெளியாகியுள்ளது.வழக்கமாக மலையாள படம் என்றால் அமைதியான,இயற்கையான சூழலை மையப்படுத்தி சாந்தமாக இருக்கும்,ஆனால் மார்கோ படம் பக்கா ஆக்ஷன் படமாக வெளியாகி, இதுவரை 100 கோடி வசூலை குவித்துள்ளது.

இதையும் படியுங்க: பத்திரிக்கை ரெடி கல்யாணம் பண்ண ரெடியா…அதிர்ச்சியில் நடிகை மாளவிகா…!

இப்படத்தை இயக்கிய ஹனீப் அத்வானி தற்போது இதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.இதனுடைய இரண்டாம் பாகத்தில் வில்லன் ரோலில் எப்போதும் தன்னுடைய வித்தியாசமான அசுர நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vikram to play villain in Marco sequel

விக்ரம் எப்போதுமே அவருடைய படங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.தற்போது விக்ரம் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஒருவேளை மார்கோ 2-வில் விக்ரம் வில்லனாக நடித்தால்,அந்த ரோல் செம வெயிட்டா தான் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!