ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்.. சாமுராய் பட நடிகை அனிதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Author: Vignesh
16 January 2024, 4:26 pm

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா.

தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 2023ல் ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார் அதாவது நாகினி 6 சீரியலில் நடித்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார்.

தற்போது ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 43 வயதாகிய அனிதா கவர்ச்சியில் பட்டையை கிளப்பும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 307

    0

    0