பாஜகவின் எச்சரிக்கைக்கு அடிபணிந்தாரா கமல்..? விக்ரம் படத்தில் முக்கிய காட்சி நீக்கம்… என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
3 June 2022, 4:22 pm

சென்னை : கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விக்ரம் படத்தில் சிறு மாற்றம் செய்த பிறகே படத்தை வெளியிட்டிருப்பது நடிகர் கமல்ஹாசன் மீது பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், ஷிவானி நாராயணன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

அரசியலுக்கு சற்று காலம் முழுக்கு போட்டுவிட்டு, முழுக்க முழுக்க திரைப்படங்களில் கவனம் செலுத்துவதாக சொல்லிய பிறகு, கமல் நடித்து வெளியான படம்தான் விக்ரம். எனவே, இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே சென்றது. அதற்கேற்றாற் போல, கமல்ஹாசன் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகள் வரையிலும் ப்ரோமோஷன் மேற்கொண்டார்.

இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்தப் படத்திற்கு நேர்மறையான கருத்துக்களே வெளியாகி வருவதால், கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். RRR மற்றும் KGF2 உள்ளிட்ட பான் இந்தியா திரைப்படங்களுக்கு சவால் விடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, விக்ரம் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அந்தப் பாடலில் கமல் ரொம்ப நாள் கழித்து தர லோக்கல் பாடலுக்கு குத்து டான்ஸ் போட்டிருந்ததும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

அதோடு, அந்தப் பாடலில் ‘ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே’ என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் கடும் எதிர்ப்பை கமல் சம்பாரித்தார். ஆனால், ஒன்றியம் என்பது குறித்து பல விக்கங்களையும் அவர் கொடுத்திருந்தார். இதனால், இந்தப் பாடல் பெரும் வைரலானது.

அதேவேளையில், ‘பத்தல பத்தல’ பாடலில் வரும் குறிப்பிட்ட வரிகளை நீக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் பாடலில் ஒன்றியம் என்று குறிப்பிட்டு மத்திய அரசை கேள்வி கேட்பது போன்றும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை கேலி செய்வது போலவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று வெளியான விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலில் இடம்பெற்ற சர்ச்சை வரிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பாஜகவினரின் எச்சரிக்கைக்கு கமல்ஹாசன் அடிபணிந்து போனாரா..? டார்ச்சுக்கு இவ்வளவுதான் பவரா..? என்று எல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?
  • Close menu