நம்ப முடியாத வெற்றி… பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இயக்குநர் லோகேஷுக்கு கமல் கைப்பட எழுதிய கடிதம்..!!

Author: Babu Lakshmanan
6 June 2022, 10:06 pm

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லேகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பற்ற கடிதம் எழுதியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், ஷிவானி நாராயணன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரசியலுக்கு சற்று காலம் முழுக்கு போட்டு பிறகு, கமல் நடிப்பில் வெளியான முதல் படம் என்பதால், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே சென்றது.

கடந்த 3ம் தேதி இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு நேர்மறையான கருத்துக்களே வெளியாகி வருவதால், கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். RRR மற்றும் KGF2 உள்ளிட்ட பான் இந்தியா திரைப்படங்களுக்கு சவால் விடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால், மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழையபடி தொடரும்.

பொது வெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்பதுதான் என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.
ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூப்-ஐ திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும்.

அதில் உள்ள லோகேஷ் கனகராஜ் என்னும் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுக்கலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள்.

அயராது… விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள்.. உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 806

    0

    0