தெலுங்கில் அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபு…படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து..!

Author: Selvan
15 January 2025, 9:45 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பிரபுவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து,அடுத்ததுது பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது காதி என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார்.

ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசரை அனுஷ்கா பிறந்த நாள் அன்று படக்குழு வெளியிட்டது.இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபுவின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு டெசி ராஜு என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாக போஸ்டர் மற்றும் விடீயோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது.

இதையும் படியுங்க: குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay surrenders to Sun TV… Jana Nayagan stuck திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!
  • Close menu