City’ல என்னத்தவர எந்த ரவுடியும் இருக்கக்கூடாது…. அதிரடி ஆக்ஷனில் விக்ரம் பிரபுவின் “ரெய்டு” டிரைலர்!
Author: Shree4 November 2023, 12:35 pm
தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் நடிகர் விக்ரம் பிரபு. தாத்தா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அப்பா பிரபல நடிகர் பிரபு என மிகப்பெரிய லெஜெண்ட்ரி குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த விக்ரம் பிரபு இன்னும் தனக்கான இடத்தை அழுத்தமாக தக்கவைக்க போராடிக்கொண்டுதான் இருக்கிறார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
முதல் திரைப்படமே மெகா ஹிட் திரைப்படமாக அமைய அவரது நடிப்பை பலரும் வியந்து பாராட்டினார்கள். லண்டனில் மேற்படிப்பை முடித்த இவர் சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். ஆர்யாவின் சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார் வேலை நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
அதன் பிறகு தான் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது “ரெய்டு” என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருக்கிறார். அப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. மிரட்டலான போலீஸ் அதிகாரியாக ” City’ல என்னத்தவர எந்த ரவுடியும் இருக்கக்கூடாது” என்ற வசனங்களுடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு . இதோ அந்த ட்ரைலர் வீடியோ: