தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருப்பவர் தான் விக்ரம். இவர் குறிப்பாக எப்பேற்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மெனக்கட்டு நடித்து தன்னுடைய கேரக்டருக்கு பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பார்.
கடந்த 1999 இல் சேது திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி , பிதாமகன், ஜெமினி, கிங், அந்நியன், கந்தசாமி ,இராவணன் ,தெய்வத்திருமகள், தாண்டவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தற்போது இருந்து வருகிறார் .
இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து பங்கேற்று வரும் விக்ரமிடம் ஒரு நிருபர் விஜய் அஜித் போன்ற பெரிய நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் உங்களுக்கு இல்லையே. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு….
என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. நீங்க இந்த படத்தோட தியேட்டருக்கு போய் பாருங்க தெரியும் என்று கூறினார். டாப் நடிகர்களில் நீங்கள் இல்லையே அதை பற்றி கேட்கிறேன் என கேட்டதற்கு. இந்த டாப் 3.. டாப் 4 இதுபோன்ற எல்லாம் எனக்கு இல்ல. எனக்கு பரவலான ரசிகர்கள். இருக்கிறார்கள்.
எல்லா ரசிகர்களுமே என் ரசிகர்கள் தான். அதுவே என்னுடைய பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன் என விக்ரம் கூறினார். உடனே கூட்டத்தில் இருந்த விக்ரமின் ரசிகர் ஒருவர்…விஜய் அஜித்திற்கு ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு கிடையாது என கூறினார். உடனே விக்ரம் சிரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக விக்ரமின் ரசிகர்கள் “சிகரம் தொட்ட மாமனிதரிடம் முட்டாள்தனமான கேள்வி” என விளாசித்தள்ளியுள்ளனர்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.