அடுத்த ஹைப்பை ஆரம்பிச்சிட்டாங்க.. தங்கலான் படம் குறித்து விக்ரம் கூறிய சீக்ரெட்..!

Author: Vignesh
2 November 2023, 5:11 pm

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் என்றால் ஊர் காவலன் என்று அர்த்தம். இரவு நேரங்களில் அந்த ஊரை சுற்றிவந்து அங்குள்ள மக்களின் பாதுகாவலனாக இருப்பதும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஊர் தலைவருக்கு தகவலை சொல்வதே அவர்கள் வேலை.

தமிழ் பேசும் பறையர் இனங்களில் ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர். இதில் விக்ரம் தங்கலானாக நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிரட்டலாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி (இன்று) வெளியாகும் என ஏற்கனவே அறிவித்ததை போன்றே சற்றுமுன் இப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் தங்கலான் லுக்கில் விக்ரமின் உழைப்பும் , நடிப்பு திறமையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படம் PS1, PS2 வை விட பல மடங்காக வெற்றி அடையும் என ரசிகர்கள் நம்பிக்கை கூறி வருகிறார்கள். இதோ டீசர் வீடியோ:

இந்த நிலையில், தங்கலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் தங்கலான் படத்தில் தனக்கு ஒரு வசனம் கூட இல்லை. பிதாமகன் படம் போன்று இந்த படம் அமைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 529

    1

    0