மாமாவும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. டாப் நடிகரின் தந்தையை ஒதுக்கிய சீயான்!

Author: Vignesh
16 March 2023, 11:50 am

சினிமாவில் வாய்ப்பு என்பது அரிதான விஷயம். திறமையை வெளிப்படுத்தி உச்சம் தொடுவது அதை விட அரிது. எத்தனையோ பேர் திறமையிருந்தும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் உள்ளனர்.

ஆனால் தோற்றாலும், ஜெயித்தாலும் அது சினிமா மட்டும்தான் என தனது திறமை, கடின உழைப்பு மூலம் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம்.

vikram_updatenews360

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஆரம்ப கட்டத்தில் விக்ரம் நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் ஹிட்டாக அமையவில்லை. 99ல் வெளியான சேது படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது வரை முன்னணி நடிகரகா இருக்கும் விக்ரம் அனைத்து இயக்குநர்களின் படத்திலும் நடித்துவிட்டார்.

prasanth-thiyagarajan-updatenews360

இதனிடையே, சொந்த வாழ்க்கையில் விக்ரமின் தாய்மாமா தியாகராஜனாம். விக்ரமின் அம்மாவின் அண்ணனான தியாகராஜன் குடும்பமும் விக்ரம் குடும்பமும் ஏதோ சில பல காரணங்களால் பேசுவதை தவிர்த்து வருவதாகவும், இதனால் இடையில் பிரசாந்தின் சரிவுக்கு காரணம் விக்ரம் தான் என்று தாய்மாமா தியாகராஜன் நினைப்பதாகவும், செய்திகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்தன.

vikram - updatenews360

அதே போல ஆரம்ப காலகட்டத்தில் விக்ரமின் வளர்ச்சிக்கு தியாகராஜன் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும், இதனால், திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் இதை பற்றி தனது யுடியூப் சேனலில் கூறும் போது விக்ரமுக்கு தியாகராஜனுக்கும் இடையே இருந்த பிரச்சினைக்கு காரணம் விக்ரம் வீட்டில் நடந்த ஒரு காதல் விவகாரம் தான் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அது யாரைப் பற்றி தெரிவித்தார் என்று தெளிவாக சொல்லவில்லை. ஆனால் அந்த காதல் விவகாரம் தான் இன்று வரை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இரு குடும்ப தரப்பிலும் பேசாமல் இருந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!