வீர தீர சூரன் டீசரை வெளியிட்ட படக்குழு…COMEBACK கொடுப்பாரா சியான் விக்ரம்…!
Author: Selvan9 December 2024, 7:50 pm
விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் – டீசர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் கடைசியாக நடித்த தங்கலான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாததால்,பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்துவருகிறார்.
இதையும் படியுங்க: அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!
விக்ரம் கூட துஷாரா விஜயன்,எஸ்.ஜே. சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டீசரில் காணப்பட்ட காட்சிகள் கிராமப்புற பின்னணியில் உருவாகி, விக்ரமின் வித்தியாசமான பாத்திரத்தை வெளிப்படுத்துகின்றன.
படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பது போல் இயக்குனர் காட்டியுள்ளார்.ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் 2025 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது