விஜய்க்கு வில்லனாகும் விக்ராந்த்?.. தளபதி தம்பியின் வேற லெவல் திட்டம்..!

Author: Vignesh
10 February 2024, 4:54 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1991 ஆம் ஆண்டு நடித்து 2005 ஆம் ஆண்டு ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் கற்க கசடற என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த விக்ராந்த். தீவிர கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர்.

vikranth

கிரிக்கெட்டில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்காமல் வேறு வழியில்லாமல் சினிமாவில் நுழைந்தார். குடும்பத்தினர் திரைத்துறையை சார்ந்தவராக இருந்தாலும், அதிலும் நடிகர் விஜய்யின் உறவுக்கார தம்பியாக இருந்தாலும், சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். தற்போது, லால்சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார்.

vikranth

தொடர்ந்து பல படங்களில், நடித்தாலும் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணன் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், விஜய் அண்ணாவுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அது தளபதி 69 இல் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இப்படி நடந்தாலும் நல்லாதான இருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 393

    0

    0