உன் கூட யார் பண்ணுவா?.. பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை.. மனம் நொறுங்கி போன விக்ராந்த்..!
Author: Vignesh5 February 2024, 3:13 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1991 ஆம் ஆண்டு நடித்து 2005 ஆம் ஆண்டு ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் கற்க கசடற என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த விக்ராந்த். தீவிர கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர்.
கிரிக்கெட்டில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்காமல் வேறு வழியில்லாமல் சினிமாவில் நுழைந்தார். குடும்பத்தினர் திரைத்துறையை சார்ந்தவராக இருந்தாலும், அதிலும் நடிகர் விஜய்யின் உறவுக்கார தம்பியாக இருந்தாலும், சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.
தற்போது, லால்சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள இப்படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின், பிரமோஷனுக்கான பேட்டியளித்துள்ள விக்ராந்த் கிரிக்கெட்டில் இருந்து விலகி சினிமாவில் நுழைந்த பின் பெரிய கவனம் செலுத்தாமல் மெனக்கிடல் போடாமல் இருந்ததாகவும், தானாக வாய்ப்பு வரட்டும் என்று இருந்ததாகவும், தெரிவித்துள்ளார்.
105 கிலோ எடை நெருங்கிய போது வீட்டில் இருப்பவர்களே வெடிக்கென பேசுவார்கள் என்றும், அதிலும் தன் மனைவி தன்னை கண்ணாடி முன்பாக நிற்க வைத்து இப்படியான ஒருவர், இப்படியான ஒரு உருவத்தையும், கவனமற்ற ஒருவரையும் வைத்து பணம் இருந்தால் நானே படம் எடுக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
அப்போது, உன்னை வைத்து படம் எடுப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? நானே இப்படி யோசிக்கும் பொழுது உன்னை வைத்து படம் எடுப்பவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று விக்ராந்த்துக்கு புரியும்படி எடுத்துரைத்துள்ளார். அப்போது, அவர் பேசியிருந்தது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால், கடினமாக உழைத்ததாக வேண்டும் என்று பல முயற்சிகளை போட ஆரம்பித்ததாக விக்ராந்த் கூறியிருக்கிறார். தன் மனைவி கடுமையாக அப்படி தன்னை பேசியதால் மட்டுமே இந்த நிலைமைக்கு வர முடிந்ததாகவும், இதற்கு தன் மனைவிதான் காரணம் என்று விக்ராந்த் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.