பல கட்சிகளை பார்த்துவிட்டேன்; நடிகர் விஜய் கட்சியில் இணைய தயார்; வில்லன் நடிகர் சொன்ன தகவல்;

Author: Sudha
9 July 2024, 10:48 am

புதுமுக இயக்குனர் நவீன் குமார் இயக்கியிருக்கும் “கடைசி தோட்டா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதா ரவி. அந்த பட விழாவில் அவர் பேசும் போது,

நான் நடிக்க வந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். நடிகன் இறந்தாலும் அவன் நடித்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கண் முன்பு வந்து கொண்டே தான் இருக்கும்.அதனால் என் நடிப்பு பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். தற்சமயம் நான் எந்த கட்சியிலும் இல்லை.

விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வேன் என்று பேசினார்.

ராதாரவி தன்னுடைய அரசியல் வாழ்க்கையை திமுகவுடன் துவங்கினார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்தார். நயன்தாராவை விமர்சித்து பேசிய விஷயம் பூதாகரமாக மாறிய பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.2019ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் எந்த கட்சியிலும் இல்லை.
இந்நிலையில் விஜய் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கினார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார். முழு நேரம் அரசியலில் ஈடுபட வசதியாக தளபதி 69 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக தெரிவித்துள்ளார். நடிகர்கள் என்பதால் மட்டும் எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொள்ள விஜய் தயாராக இல்லை

விஜய் என்ன முடிவு செய்ய போகிறார் என அரசியல் வட்டாரம் பேசிக் கொள்கிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 148

    0

    0