காரில் ஜல்ஷாவா.. இது எப்போ? எனக்கே புதுசா இருக்குங்க? பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த நடிகர் விமல்..!

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக உதயமானவர் நடிகர் விமல். முதல் படமே நல்ல வெற்றிப் படமாக அமைந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாற்றியது. அதன்பிறகு தொடர்ந்து எத்தன், வாகைசூடவா, தூங்கா நகரம் என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.

மேலும் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, சற்குணம் இயக்கத்தில் களவாணி, பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் Distributor – கள் மத்தியில் நம்பிக்கை நாயகனாக இருந்தார்.

ஆனால் காலத்தின் சூழ்ச்சியில், அதன் பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுத்து சோகத்தில் இருந்தவருக்கு மன்னர் வகையறா என்ற திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, இருந்தும் படம் ஓடவில்லை. இந்நிலையில், விலங்கு வெப்தொடர் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் விமல்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் youtube பேட்டி ஒன்றில் தினமும் காலையில் காரை எடுத்துக்கொண்டு தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களை கோடம்பாக்கத்தில் பார்த்தால் காரில் ஏற்றுக் கொண்டு ஜல்ஷாவாக குடித்துக்கொண்டே போவார் விமல் என்றும், பின்னர் சில நிமிடத்தில் இறக்கிவிட்டு கையில் 2000 பணத்தை கொடுத்து இன்னொரு நாள் கதை கூற சொல்லிவிட்டு அனுப்பி விடுவாராம்.

இதனால், அவரிடம் பலர் கதை கூற விரும்புவதில்லை என்றும், குடிக்கு அடிமையானதால் அவர் கையெழுத்து போட்ட பல சமயங்களில் நிதானம் இல்லாமல் இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இதனை கேள்விப்பட்ட நடிகர் விமல் துடிக்கும் கரங்கள் என்ற படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அவர்களிடம் பேசியுள்ளார். அதில், நான் குடித்து 45 நாட்களுக்கு மேலாகிறது. மது அருந்திவிட்டு தினமும் ஒவ்வொரு இயக்குனராக கூட்டி சென்று 2000 கொடுத்து அனுப்புவதாக அவதூறு பரப்புகிறார்கள். சில youtube பத்திரிகையாளர்கள் வாய்க்கு வந்தபடி youtube பில் எழுதுவதாகவும், ஒரு எக்ஸாம் அவர்களுக்கு வைக்க வேண்டும் என அரசிடம் கடிதம் எழுத இருப்பதாகவும் நடிகர் விமல் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

1 minute ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

35 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

37 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

2 hours ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

This website uses cookies.