கிச்சானாலே இளிச்சவாயந்தானே சார் : இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்.!!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2022, 7:58 pm
சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற வெப் சீரியஸ் விலங்கு. பிரசாத் பாண்டியரா4 இயக்கத்தில் வெளியான விலங்கு வெப்சீரியஸில் விமல், இனியா, முனிஷ்காந்த், மனோகர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது கிச்சா என்னும் கதாபாத்திரம்தான். கிச்சாவாக வாழ்ந்தவர் நடிகர் ரவி. காவல் நிலையத்தில் டீ வாங்கி தருவது உள்ளிட்ட எடுபிடி வேலைகளை செய்யும் அப்பாவியாக காண்பித்து, இரண்டாவது பாதியில் மிரட்டியிருப்பார் இந்த கிச்சா.
இதில் கிச்சா பேசும் வசனங்கள் தற்போது நெட்டிசன்களில் மீம்சுக்கு இரையாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்தை வைத்து இளசுகள் உருவாக்கி மீம்ஸ் வெற்றிநடை போடுகிறது.