பிரபல வில்லன் நடிகருடன் விரைவில் டும்டும்டும்..? காதலை உறுதி செய்த சேரன் பட நாயகி..! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!
Author: Vignesh24 January 2023, 11:00 am
கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகை விமலா ராமன் வினையை காதலித்து வருகிறார் என ஒரு வருடத்திற்க்கு முன்பிருந்தே செய்தி வந்தது. இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வைரலானது.
உன்னாலே உன்னாலே, என்றுன்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது இவர் பல முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் கொடூர வில்லனாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தற்போது விமலா ராமன் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் வினய்யும் இருக்கிறார்.
குடும்பம் என விமலா ராமன் குறிப்பிட்டு இருப்பதால் அவர்கள் காதலை மறைமுகமாக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகவும் கோலிவுட் வாட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.