போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!
Author: Selvan22 January 2025, 12:56 pm
மன்னிப்பு கேட்ட விநாயகன்
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விநாயகன்,இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.
சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை பிரமிக்க வைத்தவர்,சமீப காலமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஜொலிக்க கோட்டை விட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்துகொண்டு தகாத வார்த்தைகளால் பக்கத்து வீடு நபரை திட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
ஏற்கனவே இவர் கடந்த ஆண்டு விமான நிலைய அதிகாரிகளுடன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மேலும் தேநீர் கடையில் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோவும் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஒரு நடிகனாகவும் தனி மனிதனாகவும் என்னால் நிறைய விஷயங்களை சமாளிக்க முடியவில்லை,என் சார்பாக வந்த எல்லா பிரச்சனைக்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்,மேலும் இது பற்றிய விவாதங்கள் தொடரட்டும் என கூறியுள்ளார்.
நடிகர் விநாயகனின் இந்த அநாகரீக செயலை கண்டித்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.தொடர்ந்து இதே மாதிரி செயலில் இவர் ஈடுபட்டு வந்தால் பட வாய்ப்புகள் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.