மலையாள திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விநாயகன். இவர் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் கயல் படத்தின் ஹீரோவுக்கு நண்பராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி கொடுத்தது.
அதையது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிரட்டலான அவரின் நடிப்பை பார்த்து கோலிவுட்டில் பல முன்னனி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் கடந்த சில நாட்களாக விநாயகன் குறித்த சர்ச்சையான விஷயம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீடூ சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்குள்ளான நடிகர் விநாயகன், கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது மீடூ சர்ச்சையில் பேசப்பட்டது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைக்கவில்லை. ஒரு நடிகையை எனக்கு பிடித்துவிட்டால் வெளிப்படையாக கூப்பிடுவேன் என கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த விஷயம் தற்போது மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்சேஷனல் நடிகராக வலம் வரும் விநாயகன் சினிமா வாழ்க்கை தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில் விநாயகன் குறித்து பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது மனிதர்களை கொல்லக்கூடிய ஆபத்தான நாய்களை விநாயகன் வளர்த்து வருகிறாராம். இவற்றை பராமரிக்கவே மாதத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதாக சொல்லப்படுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.