மீண்டும் அலப்பறை செய்த ஜெயிலர் பட வில்லன்…நடவடிக்கை எடுக்குமா கேரளா சினிமா துறை..!
Author: Selvan21 January 2025, 4:26 pm
ஆபாச வார்த்தைகளால் பொதுமக்களை திட்டிய விநாயகன்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன்.இவர் மலையாளத்தில் சிறந்த நடிப்புக்காக மாநில அரசு விருதும் வாங்கியுள்ளார்.மேலும் இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.பின்பு கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்து விட்டு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை கடுமையான சொற்களால் திட்டினார்,அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!
இந்த நிலையில் தற்போது எர்னாகுளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனியில் வேஷ்டி மட்டும் உடுத்திக்கொண்டு மது போதையில் ரோட்டில் நடந்து செல்பவர்களை தகாத வார்தைகளால் திட்டி அலப்பறை செய்துள்ளார்.இதை எதிர்வீட்டு நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட,அது தற்போது வைரல் ஆகி,நடிகர் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
#Vinayakan 🥃🔞🙉
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 20, 2025
Actor or Drunker 😡
He should be banned from acting.
pic.twitter.com/JK3UWJTzop
மேலும் மலையாள சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.