உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே? நிக்‌ஷனுக்கு பதிலடி கொடுத்த வினுஷா..!

Author: Vignesh
9 November 2023, 1:23 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் விமர்சித்து இருப்பதற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது Body shaming, Sexist மனநிலையில் உச்சக்கட்டம் எனவும், இதனால் தான் வினுஷாவை இவர்கள் மோசமாக நடத்துகிறார்களா? கமல் ஹாசன் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என சனம் ஷெட்டி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணதை கூட மன்னிச்சிடுவேன். ஆனால், இதனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா அப்படினு பேசிட்டு, பாடி ஷேமிங் பண்ணி இருக்கான். எனக்கு வெளியே வந்ததும் அதிர்ச்சியை தான் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

vinusha - updatenews360

உருவகேலி செய்ததற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், நிக்சன் சொன்னது பொய். வீட்டிற்கு வந்ததும் தான் அவன் இப்படியெல்லாம் பேசியது தெரிந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மன்னிப்பு கேட்டதால் நல்லவனாகிவிட முடியாது எனவும், என்னை கேலி செய்தது நிச்சயம் ஜோக் கிடையாது என்று Bully கேங்கிற்கு சொல்கிறேன் எனவும், உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள், எனக்காக குரல் கொடுத்த விச்சுவுக்கு நன்றி என்று சரமாரியாக கேள்வி நடிகை வினுஷா கேட்டு உள்ளார்.

.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!