பாலா இயக்கத்தில் பாலகிருஷ்ணா.. பற்ற வைத்த ப்ளூ சட்டை .. பதறிப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
2 March 2024, 2:48 pm

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இவர் இயக்கத்தில் தற்போது வணங்கும் திரைப்படம் உருவாகியுள்ளது.

suriya - updatenews360

இப்படம் குறித்து, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இப்படத்தில் இருந்து நடித்து விலகிய நடிகை மமிதாவவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளியானது. தன்னை இயக்குனர் பாலா அடிக்கவில்லை என அவரும் விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், மீம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. திரைப்பட விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் “பாலா இயக்கத்தில் பாலகிருஷ்ணா” என மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், இந்த கூட்டணி அமைந்தால் இருவரும் பட பிடிப்பில், சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும், அந்த மீமில் கூறப்பட்டிருந்தது. இது மட்டும் இன்றி பாலா இயக்கத்தில் பாலையா நடிக்கும் படத்தில் சிவக்குமாரை தந்தை கதாபாத்திரத்திலும், மன்சூர் அலிகானை வில்லன் கதாபாத்திரத்திலும், நடிக்க வைக்கலாம் என நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மீம்ஸ் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!