இந்த போட்டோவில் இருக்கும் ஹீரோ யார் தெரியுமா?.. பல நடிகைகளுக்கு தண்ணி காட்டிய பிளே பாய் நடிகர் தான்..!

Author: Vignesh
3 February 2024, 5:14 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அந்தவகையில், பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜயின் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தின் மூலமாக அறிமுகமான ஜெயின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Jai

தமிழ் சினிமாவில் சுப்பரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெய். பல படங்களில் நடித்த இவர், எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி உடன் இணைந்து நடித்த காலகட்டத்தில் இருந்தே அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.

அதன்பின்னர், டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் மீது காதல் வயப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக ரகசிய குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் சமீப காலமாக உலா வந்தது. மேலும், அவ்வப்போது நடிகர் ஜெய் பல்வேறு நடிகைகளுடனும் கிசுகிசுக்களில் சிக்கி கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor-Jai

முன்னதாக, நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்தது. படங்களில் மட்டும் இன்றி வெப் தொடர்களிலும், நடிகர் ஜெய் கவனம் செலுத்தி வருகிறார். லேபில் என்னும் சூப்பர் ஹிட் வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது, ஜெயின் நடிப்பில் கருப்பர் நகரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!