“உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
Author: Selvan3 January 2025, 1:50 pm
பெண்களுக்கு ஆதரவாக பேசிய பாடகி சின்மயி
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்பவர் சின்மயி.இவர் ஏற்கனவே கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து தைரியமாக பேசி வருகிறார்.தன்னுடைய X-தளத்தில் நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தட்டி கேட்டு குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஆண்களை தாக்கி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதாவது நாடு முழுவதும் புத்தாண்டு விடுமுறை மிக கோலா கோலமாக மக்கள் கொண்டாடினார்கள்.அப்போது பிரபல டெலிவரி நிறுவனமான BLINKIT CEO தன்னுடைய X-தளத்தில் புத்தாண்டு முந்தய நாள் இரவு மட்டும் 1.2லட்சம் காண்டம் டெலிவரி பண்ணியுள்ளதாக பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
இதையும் படியுங்க: பரிதாப நிலையில் கனகா… காரணமே இவங்க தானா? போட்டுடைத்த பிரபலம்!
மேலும் அவர் இ-காமெர்ஸ் களங்கள் மூலமாக சுமார் ஒரு கோடி ஆணுறை விற்பனை செய்யப்பட்டுள்ளது என கூறி,இந்த தலைமுறையில் கன்னிப்பெண்களை கல்யாணம் பண்ணுவது ரொம்பவே அதிர்ஷ்டம் என பதிவிட்டிருப்பார்.
Then men shouldn’t have premarital sex with women.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 1, 2025
Unless said men are having sex with goats, dogs and reptiles. pic.twitter.com/sM3YJ3Myvg
இதனால் காண்டான சின்மயி ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள்.ஆனால் அவர்கள் மட்டும் கன்னிப்பெண்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்,முதலில் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் திருமணம் முடியும் வரை உடலுறவு பண்ண கூடாது என்பதை கூறுங்கள் என பதிவிட்டிருந்தார்.