ராக்காயி vs அசுரன்…அனல் பறக்கும் வீடியோ..!

Author: Selvan
22 November 2024, 3:49 pm

தனுஷ்-நயன்தாரா பிரச்னை கோலிவுட் முழுவதும் பேசு பொருளாக மாறிவரும் நிலையில்,தற்போது அசுரன் vs ராக்காயி வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடிகை நயன்தாரா ராக்காயி படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார்.அதில் அவர் மிக ஆக்ரோசமாக தன்னை தாக்க வரும் எதிரிகளை தன் கையில் இருக்கும் வாளால் ரெத்தம் தெறிக்க சண்டை போடும் காட்சி இடம் பெற்றது.

நடிகர் தனுசும் அசுரன் திரைப்படத்தில் ஈட்டி மற்றும் அரிவாளால் சண்டை போடும் காட்சி ரசிகர்களை புல்லரிக்க வைத்தது.தற்போது இணையத்தில் அசுரன் மற்றும் ராக்காயி காட்சியை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதையும் படியுங்க: நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!

அதனை பார்த்த ரசிகர்கள் படையப்பா 2 எடுத்தால் நல்லா இருக்கும்,அதில் ரஜினிக்கு பதில் தனுசும்,ரம்யா கிருஷ்ணன் பதிலாக நயன்தாராவும் நடித்தால் அட்டகாசமாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!