அனிருத் வாய்க்குள் மைக் விட்ட பத்திரிகையாளர்…. வடிவேலு பாணியில் வைரலாகும் வீடியோ!

Author: Shree
19 October 2023, 3:22 pm

இன்று உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த அனிருத்தை விஜய் ரசிகர்கள் மேளதாளங்கள் முழுங்க வரவேற்றனர். படம் பார்த்துவிட்டு வெளியேவந்த அனிருத்தை மடக்கிப்பிடித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் படம் குறித்து கேள்வி எழுப்ப கூட்டம் அலைமோதியது. அப்போது ஒரு நிரூபர் அனிருத்தின் வாய்க்குள்ளேயே மைக் விட்டு அவரை செம டென்ஷன் ஆக்கிவிட்டார். கடுப்பான அனிருத் மைக்கை உதறி தள்ளிவிட்டு அவரசர அவரசரமாக காரில் ஏறி எஸ்கேப் ஆனார். இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் வடிவேலு காமெடியுடன் ட்ரோல் செய்து வைரலாக்கியுள்ளனர்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?