“ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு சின்னதா டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்ட விராட் கோலி.. வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
28 April 2022, 1:37 pm

தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா இந்த படத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் இந்தியாவின் 5 மொழிகளில் வெளியாகி பல்வேறு ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றது.

மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ஐட்டம் சாங்கிற்கு, நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி அனைவரையும் கிரங்கடித்தார்.

நடிகை சமந்தாவின் கவர்ச்சி நடனம் இணைந்து, இந்த பாடலை மேலும் குளு குளுனு repeat mode-ல கேட்க தூண்டியிருக்கிறது என்றே சொல்லலாம். தொடர்ந்து, இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டான்ஸ் ஆடி இணையத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!