‘நான் ஆட்டிக்கிட்டே தான் பேசுவேன்..’ கோபத்தில் விஷால்,. ’அந்த’ பேரைக் கேட்டதும் கொடுத்த ரியாக்‌ஷன்!

Author: Hariharasudhan
31 January 2025, 12:00 pm

தன்னுடைய அரசியல் வருகை பற்றி நவம்பர், டிசம்பர் மாதத்தில் அறிவிக்கிறேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையின் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகர் விஷால், இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “கோயிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணம் கிடைக்கும். மனதில் உள்ள பாரம் குறைவதுபோல் தோன்றும். ஏழைப் பெண் குழந்தைகளின் படிப்பு வசதிக்காக இன்று அம்மனைத் தரிசித்தேன். என் ஆரோக்கியம் பற்றி ஒருவரிடம் கேட்கிறார்கள்.

அவர் டாக்டரா, கம்பவுண்டரா என்றுகூட தெரியவில்லை, ஆனால் அவரிடம் கேட்கிறார்கள். அடுத்தவர்களைப் பற்றி பேசுவது அநாகரீகம். ஒரு நடிகரின் படத்தை பற்றிப் பேசலாம். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசக்கூடாது. இப்படி பேசுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி நான் இப்படி ஆட்டிக்கொண்டே (மைக்கப் பிடித்து அசைத்தபடியே) தான் பேசுவேன். இந்த விஷயத்தை மிக எளிதில், வேகமாக சர்வதேச அளவில் கொண்டு சென்றவர்களுக்கு நன்றி. கடந்த வாரம் மட்டும் ஆறு சின்ன படங்கள் வெளியாகி உள்ளன.

Vishal about Union Budget 2025

ஆனால், அவற்றில் எத்தனை படங்கள் வியாபார ரீதியாக வெற்றி அடைந்தன என்று பாருங்கள். அதனால் தான் சொல்கிறேன், சின்ன படங்களை எடுப்பவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு உள்ளே வாருங்கள். தயாரிப்பாளர்கள் கவுன்சில், வழிகாட்டுதலை வழங்க ஏற்பாடு செய்யலாம்.

சிறிய படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் இருக்கிறது என்பதை புரிந்து, செயல்பட வேண்டும். சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எனவே, பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பள்ளி முடிந்து கல்லூரிக்குச் செல்லும் முன்பே, பெண்கள் தற்காப்புக்கலையை கற்று, அதில் தேர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், “அரசியல் பயணம் பற்றி நவம்பர், டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன். ஆனால், நான் வரக்கூடாது என நினைக்கிறேன். இன்னொரு கட்சி, இன்னொரு கொடி, இன்னொருத்தர் என இருக்க வேண்டாமே. அரசியல்வாதிகள் சரியாக இருந்தால், நாங்கள் எங்கள் தொழிலைப் பார்ப்போம்.

இதையும் படிங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?

நாளை நடக்கும் மத்திய பட்ஜெட்டில் திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது மிகவும் வருத்தமாக உள்ளது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும், இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது.

18 சதவீதம் ஜிஎஸ்டி, எட்டு சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சினிமாத் துறைக்கு நல்லது அறிவித்தால் பஸ் பிடிச்சு வந்தாவது நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிப்போம்” எனக் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி