நான் என் காதலியுடன் வெளிநாட்டில் சுற்றித்திரிந்தேன்? வைரல் வீடியோவுக்கு விஷால் விளக்கம்!
Author: Rajesh28 December 2023, 1:32 pm
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
விஷாலின் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயம் வரை சென்று நின்று போனது. அதன் பின்னர், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இதை வைத்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், விஷால் குறித்து நேற்று ஒரு வீடியோ இணையதளத்தில் லீக் ஆகியது. அதில், இளம் பெண் ஒருவருடன் ஜோடியாக நியூயார்க் நகரில் விஷால் உலா வந்துள்ளார். வீடியோ எடுப்பதை கவனித்ததும் முகத்தை மறைத்துக் கொண்டு அந்த பெண்ணுடன் ஓடுகிறார். இந்த வீடியோ வைரலாக இவர் விஷாலின் காதலியா என்று கேட்டு வந்தனர்.
இது குறித்து தற்போது தெளிவான விளக்கம் கொடுத்துள்ள விஷால், மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். இந்த வீடியோ குறித்து வெளியாகும் செய்திகளில் இது பாதி உண்மை, ஆம் நான் நியூயார்க்கில் இருக்கிறேன், இது எனது உறவினர்களுடன் நான் வழக்கமாக தங்கும் இடமாகும். நான் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம்.
அதன் மற்ற பாதி உண்மையில் ஒரு குறும்புத்தனம், இது எங்கள் உறவினர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று விளையாட முடிவுசெய்து என் உறவினர்களால் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ தான் இது. அதனால் அதை பற்றி டிடெக்ட்டிவ் வேலை செய்து பரப்பப்படும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என கூறி விளக்கம் அளித்துள்ளார்.