விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
Author: Selvan9 January 2025, 9:54 pm
வீண் விவாதங்களுக்கு கண்டனம் தெரிவித்த ரசிகர் மன்றம்
நடிகர் விஷால் நடிப்பில் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது மதகதராஜா திரைப்படம்.சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஷால் மிக சோர்வுடன் பழைய மாதிரி இல்லாமல் கை நடுக்கத்துடன் நிதானம் இல்லாமல் காணப்பட்டார்.
அவருடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலர் அவருக்கு என்ன ஆச்சு,திடீர்னு இப்படி மாறிட்டார் என வேதனை தெரிவித்து வந்தனர்.அவருக்கு வைரல் காய்ச்சல் காரணமாக தான் இப்படி இருக்கிறார் என மருத்துவ அறிக்கையையும் வெளியானது.
இதையும் படியுங்க: திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
ஆனால் சில சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஷால் அவருடைய தவறான பழக்கவழக்கம் தான் காரணம் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனால் விஷாலின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,தற்போது விஷால் ரசிகர் மன்றம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வீண் பொய்யான தகவல்களை பரப்பி விஷாலை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும்,அவருக்கு ஆதரவு நீட்டி வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறியும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.