சிம்புவின் பாணியை பின்பற்றும் விஷால்..! தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாகிய அந்த செயல்…!
Author: Rajesh17 February 2022, 1:28 pm
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியையும் தரவில்லை. இதனால் நொந்து போன விஷால் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அந்த வகையில், இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார்.
இந்தப்படம் காவல்துறையினை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாம். இந்த நிலையில், நடிகர் விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திறக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் விஷாலின் நெருங்கிய நண்பர்களாம். இவர் கொடுத்த கால்ஷீட்டில் 25 நாட்கள் தாமதமாக வந்துள்ளார் என்று தெரிகிறது. ஒரு நாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தால் 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் புலம்புவதாக கூறப்படுகிறது.
இந்த சினிமாத்துறையில் இப்படி படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து தங்கள் வாழ்க்கையை இழந்த நடிகர்கள் ஏராளம். அப்படி, இந்த ஒரு காரணத்தினால் தான் நடிகர் சிம்பு 3 ஆண்டுகள் சினிமா துறையை விட்டே விலக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டார். அவர் செய்த அதே செயலை தற்போது விஷால் செய்து வருவது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைச்செய்துள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில், நடிகர் விஷாலின் நிலைமை தமிழ் சினிமாவில் சற்று கவலைக்கிடமாக தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படியே அவர் நடந்து கொள்வது அவரின் திரை வாழ்க்கைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.