தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
விஷாலின் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயம் வரை சென்று நின்று போனது. அதன் பின்னர், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இதை வைத்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், அவ்வப்போது விஷால் குறித்த திருமண செய்திகள் வதந்தியாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது மீண்டும் நடிகர் விஷாலின் திருமண செய்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடிகை அபிநயாவை விஷால் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இருவரது பெற்றோர்களின் சம்மதத்தின் படி இந்த திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம். ஒருவேளை அவர் வெளிநாட்டில் டேட்டிங் சென்ற பெண்ணுடன் தான் திருமணமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.