தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… டிரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இவர்கள் இருவரும் இனைந்து விஷாலை வைத்து லத்தி எனும் படத்தை தயாரித்திருந்தார்கள். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து படுதோல்வியடைந்த நிலையில், படக்குழு நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
லத்தி படத்தின் தோல்வியால் விஷால், நந்தா மற்றும் ரமணா நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நட்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் நடிகர் விஷாலுக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவர் மீதும் விஷால் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் லத்தி படத்தில் பணிபுரிந்து வந்த யூனிட்டுக்கு கூட ரூ. 1.5 கோடி வரை சம்பளத்தை பாக்கி வைத்துள்ளதாகவும், அவர்கள் விஷாலிடம் வந்து சம்பள பாக்கியை கேட்டதால், விஷால் இவர்கள் இருவர் மீதும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.