பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்.. அட பொண்ணு இவங்க தானா..!
Author: Vignesh9 August 2023, 6:45 pm
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. ஆனால் திடீரென திருமணம் நின்று போனது.
இதனிடையே, பாண்டியநாடு படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இப்படி வெளியாகும் இந்த தகவல் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது வழக்கம் போல் வந்ததியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.