படம் ஹிட்…இனி கல்யாணம் தான்…மேடையில் நடிகர் விஷால் பர பர பேச்சு..!
Author: Selvan18 January 2025, 8:10 pm
விரைவில் விஷால் திருமணம்
தமிழ் சினிமாவில் வசீகர உடல் அமைப்புடன் பல படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றவர் நடிகர் விஷால்.
சினிமாவில் இவர் அடியெடுத்து வைத்த ஆரம்ப கால படங்களான தாமிரபரணி,சண்டக்கோழி,திமிரு போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதன் பின்பு தொடர்ந்து ஹிட் படங்ககளை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது .மேலும் தற்போது பொங்கல் அன்று சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள மதகதராஜா திரைப்படம் இவருக்கு எதிர்பார்க்காத அதிஷ்டத்தை கொடுத்துள்ளது.
படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில்,இப்படம் திரைக்கு வராது என மனநிலைக்கு ரசிகர்கள் வந்தனர்.ஆனால் திடீரென படக்குழு பொங்கல் பண்டிகையொட்டி இப்படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: தறிகெட்டு ஓடும் மதகதராஜா…தள்ளாடும் காதலிக்க நேரமில்லை…பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன சொல்லுது..!
மேலும் இப்படத்தில் முதன்முதலாக விஷால் பாடிய பாடலும் படு வைரல் ஆனது.இந்த சூழலில் படத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவில் நடிகர் விஷால் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.அதில் கையில் மைக்கை வாங்கியவுடன் நில நடுக்கம் என்றாலே,ஒரு நாள் தான் செய்தி வரும் ஆனால் விஷால் கை நடுக்கம் உலகம் முழுவதும் பல நாள் வைரல் ஆனது என கூறினார்.மேலும் என்னுடைய உடல்நிலை மீதும் பலரும் அக்கறைபட்டு நான் மீண்டும் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என எண்னிடம் விசாரித்தார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகர் சங்கம் கட்டிடம் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்து விடும்,அதற்கு அடுத்து ஒரு நான்கு மாதத்தில் என்னுடைய திருமணமும் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.இதனால் நடிகர் விஷால் ஏற்கனவே காதலில் இருக்கிறாரா ,இல்லை சினிமாவிற்கு அப்பாற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.