15 வருட காதல்…விஷாலுடன் திருமணமா…உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!

Author: Selvan
29 January 2025, 1:03 pm

காதலை அறிவித்த நடிகை அபிநயா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால்,சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது.

இதையும் படியுங்க: திருமணம் செய்யாமலேயே தாயான பிரபல நடிகை… விமர்சிப்பவர்களுக்கு இதுதான் பதிலடி..!

இப்படத்தின் வெற்றி விழாவின் போது பேசிய விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்த பிறகு விரைவில் என்னுடைய திருமணம் குறித்த நல்ல செய்தி உங்களுக்கு வரும் என ஆணித்தரமாக சொன்னார்.இதனால் நடிகர் விஷால் ஏற்கனவே காதலில் இருக்கிறாரா,இல்லை சினிமா துறைக்கு அப்பாற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

Vishal and Abhinaya Relationship

இந்த நிலையில் விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் ஒன்றாக நடித்த நடிகை அபிநயா ஒரு யூடியூப் சேனலில் தன்னுடைய காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.ஏற்கனவே இவர் விஷாலுடன் பூஜை படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் காதல் இருப்பதாக ரூமர்கள் கிளம்பின,மேலும் மார்க் ஆண்டனி படத்தில் மீண்டும் இவர்கள் இணைந்ததால் கண்டிப்பாக இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இதற்கெல்லாம் தற்போது நடிகை அபிநயா முட்டுக்கட்டை போட்டுள்ளார்.அந்த பேட்டியில் நடிகை அபிநயாவிடம் நீங்கள் சிங்கிளா அல்லது யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா என கேட்டபோது,அதற்கு அவர் வெட்கத்துடன் நான் 15 வருடமாக என்னுடன் படித்த எனது நண்பனை காதலித்து வருகிறேன்,விரைவில் நாங்கள் திருமணம் செய்ய உள்ளோம் என கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.இதன் மூலம் விஷாலுடன் இருந்த வதந்திக்கு END CARD போட்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?