விஷால் கல்யாணத்தை நிறுத்திய லட்சுமிமேனன்.. புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!
Author: Vignesh19 March 2024, 11:16 am
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஷால் அனிஷா ரெட்டி என்பவர் உடன் நிச்சயம் நடைபெற்ற நின்று போனதுக்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, நடிகை லட்சுமிமேனன் விஷால் உடன் நடித்த போது அவரை காதலித்ததாகவும். விஷால் வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ள செய்தியை கேட்டு அனிஷா செட்டிக்கு லட்சுமிமேனன் கால் செய்து பேசியதாகவும்.
அவருடன் பேசியபோது, நடந்த விஷயத்தை அப்படியே அனைத்தையும் கூறிவிட்டாராம். இதனால், தான் அனிஷா செட்டி விஷாலுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி இருக்கிறாராம். விஷால் திருமணம் நின்று போக லட்சுமிமேனன் தான் காரணம் என்று பயில்வான் ஒரு குண்டை தூக்கி போட்டு உள்ளார்.