தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… டிரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. நடிகை லட்சுமி மேனனை காதலிப்பதாகவும் வதந்தி பரவியது. பின்னர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது,
ஆனால் திடீரென திருமணம் நின்று போனது. இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை அபிநயா நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23′ உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படங்களில் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தவகையில் இருவரும் சமீபகாலமாக காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது பற்றி நடிகை அபிநயா விளக்கம் கொடுத்து இருக்கிறார். “மார்க் ஆண்டனி என்ற படத்தில் தான் நாங்கள் கணவன் மனைவியாக நடிக்கிறோம், நிஜத்திலேயே அப்படி என வதந்தி பரப்பி இருக்கிறார்கள், அது உண்மை இல்லை” என அவர் கூறி இருக்கிறார்.
நடிகை அபிநயா, காது வாய் பேச முடியாதவர். ஆனால் தனது திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.