உதயநிதி மனைவியுடன் நடுரோட்டில் சண்டை போட்ட பிரபல நடிகர்..! – பின்னணி இதுதானா?..
Author: Vignesh18 December 2022, 10:15 am
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட…திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் திடீரென திருமணம் நின்று போனது. விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லத்தி வருகிற 22 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில், வெவ்வேறு ஊர்களுக்கு புரோமோஷனுக்காக பயணம் செய்யும் விஷால் பத்திரிக்கையாளர்களிடம் தன் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்து வரும் நடிகர் விஷால் உதயநிதி அமைச்சர் ஆனது பற்றியும் பகிர்ந்து வருகிறார். நெருங்கிய நண்பரும் கல்லூரிப்பருவ நண்பராக திகழ்ந்து வரும் உதயநிதி சினிமாவில் நடிப்பது பற்றியும் விஷால் பேசியிருக்கிறார்.
அந்தவகையில் விஷால் ஒரு பேட்டியொன்றில் உதயநிதி மனைவி கிருத்திகா பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில், கிருத்திகாவும் நானும் நிறையவாட்டி சண்டைப் போட்டிருக்கிறோம்.
அமெரிக்காவில் நான், உதைய், கிருத்திகா அப்ராட் போகும் போது நடுரோட்டில் சண்டைப்போட்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கிருத்திகா என் உடன்பிறந்த சகோதரி என்று தெரிவித்துள்ளார். மேலும், 25 வருட நட்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், நாங்கள் சந்திக்கும் போது பல சுவாரசிய விஷயங்களை பற்றி பேசுவோம் என தெரிவித்துள்ளார்.