தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… டிரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. நடிகை லட்சுமி மேனனை காதலிப்பதாகவும் வதந்தி பரவியது. பின்னர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது,
ஆனால் திடீரென திருமணம் நின்று போனது. இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியானது.
நடிகை அபிநயா நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23′ உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படங்களில் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தவகையில் இருவரும் சமீபகாலமாக காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் ஒரு செய்தி வெளியானது.
பின்னர் இது பற்றி நடிகை அபிநயா விளக்கம் கொடுத்து இருக்கிறார். “மார்க் ஆண்டனி என்ற படத்தில் தான் நாங்கள் கணவன் மனைவியாக நடிக்கிறோம், நிஜத்திலேயே அப்படி என வதந்தி பரப்பி இருக்கிறார்கள், அது உண்மை இல்லை” என அவர் கூறி இருந்தார்.
இதனிடையே, லத்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்த விஷால், நிச்சயம் நின்றுபோன கஷ்டத்தை பற்றி கூறியுள்ளார். 2019 தன் வாழ்க்கையில் மோசமான ஆண்டு என்றும், தான் தனியாக பல விசயங்களை தனக்குள்ளே பேசியதாகவும், இதை பலர் பைத்தியம்ன்னு கூட தன்னை பார்த்து சொன்னதாகவும், தனக்கு ஒரு வில் பவர் தன்னுடைய பலமும் பலவீனமாக இருக்கிறது. எதையும் நடத்திக்காட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது என விஷால் தெரிவித்திருந்தார்.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.